தமிழா!!! "இதை நீ படிக்கனும்"... "KOLAVERI song" மாதிரி "PROMOTE" செய்ய வேண்டும்!!! PLEASE!!!

இப்போதாவது" விழித்திடு தமிழா !!! .... முல்லை பெரியாறு நமது "உரிமை பிரச்சனை" !!! முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

"மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம் வாங்க "

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளன. குடிநீர் , சாலை வசதி , மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரி...

ரத்த தானம் வேண்டுவோர்க்காண ஆன்லைன் சேவை!

இந்தியாவில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் சில நேரங்களில் ஆபத்து காலத்தில் ரத்தம் கொடுப்பவர்களை எப்படி தேடுவது என்று எண்ணும் அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இது வரை ரத்த தானம் மூலம் 40 ஆயிரம் பேரின் குடும்பத்துக்கு ஒளியை அளித்திருக்கிறது இத்தளம் .இணையதள முகவரி:

நோக்கியாவின் புதிய குவெர்டி போன் !

தொடக்க நிலையில் குறைந்த விலையில் குவெர்டி போன் தேடுவோர்,நோக்கியவின் C3 தேரும் அம்சங்கள் குறித்து பரிசீலிக்கலாம்.நான்கு அலைவரிசையில் இயங்கும் இந்த போன் பார் டைப் மாடலாக வடிவமைக்கபட்டுள்ளது. 114 கிராம் எடையுள்ளது,2.4 அங்குல அகலத்தில் வண்ணத்திரை,320*240 பிக்ஸெல்களுடன்

பிராடு பெர்ரி யாக மாறிய இந்திய பிளாக் பெர்ரி! !

சமீத்தில் பிளாக் பெர்ரி பயன்படுத்திய இந்தியா வடிக்கையாளர்கள் அனைவரும் ரத்த்க் கொதிப்பு எகிறியது.தொடர்ந்து மூன்று நாட்கள் பிளாக் அவுட் ஆனது பிளாக் பெர்ரி.இந்த நாட்களில் அந்த செல் போன் வைத்திருந்த வடிக்கையாளர்கள் கடுமையான அவதிக்குள்ளானர்கள். காரணம் மின்னஞ்சல்,வங்கி பரிவர்த்தனை,பேஸ்புக் என பல்வேறு பயன்பாடுகளுக்கும்

Recent Posts

Wednesday, 25 April 2012

அமெரிக்கா முழுவதும் வியப்போடு கவனிக்கப்படும் தமிழர் –ஸ்ரீ தர்

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார்.

ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர்.

இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும்.

அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.
100
கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.

இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Friday, 13 April 2012

.. தமிழ் பொறியியல் நண்பர்களே தயவு செய்து படியுங்கள் .


எனது வலைதள நண்பர்களே . . இந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள பெருமையும் படுகிறேன். . தலை குனிவும் அடைகிறேன் . . ஏனென்றால் நானும் பொறியியல் படித்த ஒரு இளைஞன் . .இந்த கட்டுரையை உங்கள் வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். .அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள். . .


எந்த சமூகம் படைப்புகளைஉருவாக்குகிறதோ அந்த சமூகம் தான் உலகையே கையில் கொள்ள முடியும் ! இத்தனை லட்சம் பொறியாளர்களை நாம் வருடா வருடம் உருவாக்கிகொண்டிருக்கிறோம்

ஆனால் நம்மிடமிருந்து எந்த தயாரிப்புகளும் வரவில்லை ஊதியத்திற்காக வேலைபார்க்கும் மூளைச்சலவை வேலைகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது, நீங்கள் கண்டு பிடிக்கவேண்டும் !

ஒரு ஐன்ஸ்டீன் வரவில்லை, ஒரு தாமஸ் ஆல்வா எடிசன் வரவில்லை
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் உங்கள் படைப்புகளுக்கு நீங்கள் பெயரிடுங்கள் உங்கள் தாயார் பெயரை இடுங்கள். கோவிந்தம்மாள் என பெயரிடுங்கள், உலகம் முழுக்க தமிழ் பேசப்பட வேண்டுமானால்
தமிழர்கள் மிகப்பெரிய படைப்புகளோடும் மிகப்பெரியதொழில்நுட்பத்தோடும் வெளி வரவேண்டும்

என்று உலகநாடுகள் இந்தியப்பொருட்களை கையில் வைத்திருப்பதை கௌரவமாக நினைக்கின்றதோ அன்றைக்கு மிகச்சரியான தமிழ் புத்தாண்டு இப்போதைக்கு சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

-
கோபிநாத்

*************************************************************

எத்தனை உத்தமமான எதிர்பார்ப்பினோடு கூடிய வார்த்தைகள்
கேட்கையில் கௌரவமும் கர்வமும் போட்டி போட்டு தொற்றிக்கொண்டன..

Thursday, 22 March 2012

தமிழா விளித்து கொள்........!


 இன்று தெலுங்கு ..........வருட பிறப்புக்கு தமிழ் நாட்டில் விடுமுறை. ஆந்திரத்தில்......... தமிழ் புத்தாண்டுக்கு விடுமுறை விட்டார்களா?

தமிழா விளித்து கொள்........!

திராவிடர்கள் என்றால் தெலுங்கர்கள் .......அவர்கள் தமிழ் இனத்தினை சூறையாடி கொண்டு இருகின்றார்கள்.

தமிழ் நாட்டில் உள்ள ........திராவிட போர்வையில் உள்ள தெலுங்கர் தமிழன் தமிழ் என்று சொல்லி........ தமிழ் இனத்துடன் கூட இருந்து குழி பறிபதுதன் ........தமிழ் நாட்டில் திராவிட சாதனைகள் .

மலையாளிகளின் ஓணத்துக்கு.........தமிழ் நாட்டில் விடுமுறை. கேரளாவில் .......பொங்கலுக்கு விடுமுறை விட்டார்களா?...

உலகாக தமிழர் தாய் மண்ணில்...... இந்த தெலுங்கர் மலையாளிகள் இனத்தவர்கள் அவர்கள்......... பாண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை

யாரால் கொண்டு வர பட்டது...... திராவிட கட்சிகள் .....திராவிட என்ற பெயரில் ஆட்சிக்கு .......வந்தவர்கள் திராவிட பெயரில் மறைந்து இருக்கும் ........தெலுங்கு இனத்தவரால் இந்த விடுமுறைகொண்டு வர பட்டது .

தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கும் ................தெலுங்கர் மலையாளிகளுக்கு அவர்கள் ........பண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை

யாரால் கொண்டு வாரபட்டது .....திராவிட கட்சிகள் ......திராவிட என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள்........ திராவிட பெயரில் மறைந்து இருக்கும் ..........தெலுங்கு இனத்தவரால் இந்த விடுமுறைகொண்டு வர பட்டது .

வந்தாரை வாழவும் ஆளவும் வைத்தோம்..........இன்று தமிழன் உரிமைகள் தமிழர் உடைமைகள்....... திராவிடர்களால் சூறையாட பட்டுக்கொண்டு இருக்கிறது

தமிழா இனி வந்தாரை வாழ வைப்போம் ......என்பதினை மாற்றி வந்தோரை விரட்டி அடிப்போம்......... அப்போது தான் தமிழர் இருப்பு உறுதி செய்யப்படும்... ......இல்லையென்றால் தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே.......... அகதிகளாக தான் திரியவேண்டும்..

பாப்பராஸி என்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?

mainபாப்பராஸி என்பவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா ?
'பாப்பராஸி' என்றால் அலறுவார்கள் சர்வதேசப் பிரபலங்கள். எந்த ஒரு பத்திரிகையையும் சாராமல் சுதந்திரமாகப் பணிபுரியும் போட்டோ ஜர்னலிஸ்ட்களுக்கு பெயர்தான்... பாப்பராஸி!


பிரபலங்களைத் துரத்துவதுதான் வேலை. பாப்பராஸிகளின் வாழ்க்கை ரொம்பவே சவாலானது. யாராவது பிரபலம் நாலு முறை தும்மினால், டாக்டருக்கு முன் பாப்பராஸிகளுக்குத் தெரிந்துவிடும். ஏனெனில், அவர்களைச் சுற்றியுள்ள டிரைவர், வேலைக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் எனப் பலரை தங்களின் சோர்ஸ்களாக மாற்றிவிடுவார்கள். ஒவ்வொரு பாப்பராஸிக்கும் ஏழெட்டு உதவியாளர்கள் உண்டு. பாப்பராஸிகளுக்கு எல்லா வாகனங்களையும் ஓட்டத் தெரியும். வி.ஐ.பி -க்கள் 100 கி.மீ. வேகத்தில் சென்றாலும் புகுந்து புறப்பட்டுப் பின் தொடர்வார்கள். அதிநவீன சேட்டிலைட் போன், லேப்டாப், ஹெலிகாப்டர் வரை வைத்து இருப்பார்கள். ஒரு முக்கியமான புகைப்படம் கிடைத்துவிட்டால், அதைக் கொடுத்துப் பத்திரிகைகளிடம் லட்சக்கணக்கான டாலர்கள் கறந்துவிடுவார்கள்.
ஜெர்மானிய அரசியல் தலைவர் பிஸ்மார்க் முகத்தில் கட்டுகளோடு வீட்டில் இறந்துகிடந்தார். போலீஸ் வருவதற்கு முன் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள் இரண்டு பாப்பராஸிகள். கட்டுகளை அகற்றிவிட்டு புகைப்படம் எடுத்துவிட்டு பழையபடி கட்டு போட்டுவிட்டார்கள். மறுநாள் போலீஸ் கட்டுகளோடு படத்தை வெளியிட, தனியார் பத்திரிகை ஒன்று முகம் தெரிகிற படம் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது.அந்த படத்துக்காக பாப்பராஸிகளுக்குக் கிடைத்த சன்மானம் 20 லட்சம் டாலர்கள்.


பாப்பராஸிகளின் எல்லை தாண்டிய தொல்லையால் நிகழ்ந்ததுதான் டயானாவின் மரணம். டயானாவை, அவரது காதலன் டோடி ஃபயத்தோடு போட்டோ எடுத்துவிட அலைந்து திரிந்தார்கள் பாப்பராஸிகள். 97 -ம் வருடம் ஆகஸ்ட் 31 -ம் தேதி அவர்களிடம் இருந்து தப்பிக்க, படுவேகமாகச் சென்றது டயானாவின் கார். கண்ட்ரோலை இழந்து கார் விபத்தில் சிக்கி, டயானா ரத்தவெள்ளத்தில் துடிக்க, அந்த நேரத்திலும் கடமை தவறாமல் போட்டோ எடுத்தார்கள் பாப்பராஸிகள். அந்த இடத்தில் ஆம்புலான்ஸுக்கு தடையாக இருந்த ஒன்பது பாப்பராஸிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடிவிக்கப்படார்கள்.


இதன்பின், பெரும்பாலான நாடுகள் பாப்பராஸிகளின் செயல்பாடுகளை பல்வேறு சட்டங்கள் மூலம் சுருக்கிவிட்டன. நார்வே, ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் 'புகைப்படங்களை பத்திரிகைகள் பிரசுரிப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெறவேண்டும்' என்று சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தது. ஆனால், அவர்கள் அடங்கவே இல்லை. பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் பலமுறை தன் குழந்தையை அலட்சியமாகத் தூக்கி வருவதை படம் எடுத்து வெளியிட்டார்கள். அமெரிக்க நீதிமன்றம் தலையிட்டு பிரிட்னிக்கு எச்சரிக்கை விடுக்க, அதற்கடுத்து நல்ல தாயாக மாறிவிட்டார் பிரிட்னி.


சீனாவில் 'ஓரியண்டல் டெய்லி நியூஸ்' என்கிற நிறுவனம் வெளியிட்ட செய்தி 'நீதித் துறைக்கு எதிரானது' என்று சொல்லி கிரிமினல் வழக்குத் தொடுத்தது சீன நீதிமன்றம். கடுப்பான செய்தி நிறுவனம், நீதிபதியை ஃபாலோ பண்ண எக்கச்சக்க ஆட்களை அனுப்பிவைத்தது. தொடர்ந்து 72 மணி நேரம் நீதிபதியைப் படுத்தியெடுத்துவிட்டார்கள் பாப்பராஸிகள். டென்ஷனின் உச்சத்துக்கு போன நீதிபதி, மொத்தப் பேரையும் உள்ளே தூக்கிப் போட்டு ரிமாண்ட் செய்துவிட்டார்.


பிரிட்டனில் நடிகை சியன்னா மில்லர் மற்றும் பாடகி லில்லி ஆலன் இருவருமே 'பாப்பராஸிகள் தங்களைப் பின் தொடரக் கூடாது' என்று வழக்கு போட்டுத் தடை வாங்கி இருக்கிறார்கள்.


ஆனால், பாப்பராஸிகள் அசரவில்லை. கேமரா சகிதம் இப்போதும் மறைந்திருக்கிறார்கள்!

கன்னிமாரா நூலகம் பற்றிய வரலாற்று தகவல்கள் !!!!


கி.பி. 20ம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் வளர்ச்சி என்பது மிகவும் வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்று சொல்லாம். எல்லாத் துறைகளிலும் எழில் மிக்க முன்னேற்றம், மாற்றம் ஏற்பட இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நூலக இயக்கம் சிறந்து விளங்குகின்றது என்பதை அறியலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் நூலகப் பாதையில் இருபதாம் நூற்றாண்டினைப்பொற்காலம்என்று குறிப் பிடலாம்.

சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்.


கன்னிமாரா பொது நூலகத்தை முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவர். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமாக காட்சியளிக்கிறது இந்த நூலகம். 1890-ல் மக்களுக்காக, மக்களே, மக்களால் நடத்தும் வகையில்தான் பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினர் என்பதை அறியலாம்.

அடிக்கல் நாட்டிய ஆளுநர் அவர்கள், 1890 மார்ச் 22ல் ஆற்றிய உரையின் சாரமானது, “இந்தியாவில் பலர் படிக்க முன் வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து படித்து முதுகலை பட்டம் பெற முடியவில்லை. காரணம் என்ன? படிப்புக்கு உதவும் வகையில் நூல்கள் இல்லை. நூல்கள் கொடுத்து உதவும் வகையில் நூலகங்கள் இல்லை என்ற குறையை போக்குகின்ற வகையில் தான், பொது நூலகத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் உங்கள் முன் நிற்கின்றேன்என்றார்.

படிக்க ஆர்வமுள்ள அனைவருக்கும் நூலகம் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்என்று அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர் அவர்கள் மிகவும் உயர்ந்த எண்ணத்தில் பதிவு செய்யப்பட்ட வரலாற்று பெட்டகமாக நமது கண் முன் காட்சியாக காணுகின்றோம். கன்னிமாரா பொது நூலகமான சிறப்பான கட்டடம் கட்டப் பெற்று புத்தம் புதிய பொலிவுடன் காட்சியளித்தது. பிரிட்டிஷ் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அவருக்கு பின்வந்த ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக்என்பவரால் 1896ல் டிசம்பர் 5 ம் நாள் (இன்று) பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

கன்னிமாரா நூலகத்திற்கு கொடையாக நூல்கள் வழங்குபவர்களும் வழங்கினார். பின்பு அரசு மானியத்தில் நூல்கள் வாங்கப் பெற்று சிறப்புடன் வளர்ச்சியை அடைந்தது.

நூலகத்தின் வளர்ச்சி

1940-
ல் தனி நிறுவனம் ஆகியது
1950-
ல் தமிழ்நாடு மைய நூலகமானது
1954-
ல் இந்திய நூல்களின் வைப்பிடம் Depository under the Delivery of Books (Public Libraries) Act 1954) ஆகியது
1955-
ல் ஐக்கிய நாடுகள் அவை நூல்களின் வைப்பிடமாக மாறியது 1965ல் யூனெசுகோ தகவல் நிறுவனம் (Unesco Information Centre) ஆயிற்று
1966-
ல் நூலக ஆணைக் குழு நூலகங்களுக்கான பயிற்சி நிலையம் ஆயிற்று
1973-
ல் புது கட்டடம்
1983-
ல் மேலும் மேலும் புதிய பொலிவுடன் வளர்ச்சி அடைந்தது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக நூலக வரலாற்றில் எத்தனை மாற்றம்! முன்னேற்றம்! தொடங்கியவர்களின் ஆசைகள் நிறைவேறிவிட்டது. நூல்கள் அலமாரிகள் வைக்க இடமின்றி காணப்படுகிறது என்பதை காணும் போது எத்தனை மகிழ்ச்சி.

கன்னிமாரா நூலகம் தனிப்பெரும் நிறுவனமாக மாறிவிட்டது. இன்னும் எத்தனை முன்னேற்றம் காத்துக் கிடக்கின்றன. நூலகமானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவெளியின்றி பன்னிரண்டு மணி நேரம் திறந்து இருக்கின்றது. 1980 ஏப்ரல் முதல் படிக்க விரும்பும் எவரும் இங்கு வரலாம். வாசிக்க வரும் நபர்கள் எத்தனை ரகம் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர், குழந்தைகள், ஆராய்ச்சி யாளர்கள் என்று எத்தனையோ வகை.


யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்றார் திருமூலர். இதனை மனதில் கொண்டு வாசகர்களுக்கு - படிக்கிறவர்களுக்கு குறிப்புதவி வசதி அளிக்கப்படுகிறது. காலம் கடந்த நூல்களில் இருந்தும் எதிர்கால எதிர்பார்ப்புகளில் இருந்தும் கருத்தைத் தேடிக் கொடுக்கும் கனிவான பணியும் நடக்கிறது.

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான 'பிரெய்லி' மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன. இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.

இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ பிலிமில் நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.

இங்கு என்ன கிடைக்கிறது என்று எளிதிலே கேட்பவர்கள் பலர்! இங்கு எல்லாம் கிடைக்கிறது என்று சொல்லும் நிலையிலே இருக்கிறது - செயல்படுகிறது - நூலகம் ஆண்டொன்றுக்கு இரண்டு இலட்சம் வாசகர்களையும் மூன்றே கால் இலட்சம் பயன்படும் நூல்களையும் பயன்படுத்த வேகம் கொண்டு அறிவுக்களஞ்சியமாக ஆராய்ச்சி மையமாய், நடைப்போடுகிறது நூலகம் இன்று! வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் கன்னிமாரா சென்று கருத்தாக்கம் பெறுங்கள். இத்தனையும் ஏட்டிலே எழுதிவிட்டால் இனிப்பின் சுவை குறைந்து விடும் அதனால் நேரில் சென்று சுவைத்துப் பாருங்கள்!


கன்னிமாரா நூலகத்தின் இணையதளதிதிர்க்கு செல்ல  இங்கே சொடுக்கவும்